×

பிரிதிவிராஜின் ஆடுஜீவிதம் படக்குழுவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பிரித்விராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆடு ஜீவிதம் படக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என்று கடந்த செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டு  குன்னங்குளம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

அதே போல ஜோர்டானில் இப்படக்குழுவில் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆடு ஜீவிதம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிப்பதற்காக     58 பேர் கொண்ட படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சிக்கிக்கொண்டார் .

ஊரடங்கு காரணத்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் தாய் நாடு திரும்ப முடியாகாமல் தத்தளித்து வந்தனர். இதையடுத்து கேரளா அரசாங்கம் அவர்களை சிறப்பு விமானத்தின் மூலம் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். பின்னர் குவாரன்டைன் மையத்தில் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு அவரவர் வீடு திரும்பினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News