Categories: Cinema News latest news

எஸ்.ஜே.சூர்யா படத்தின் கிளைமேக்ஸை பார்த்து அடி வெளுத்துவிட்ட ரசிகர்… ஒரு உண்மை சம்பவம்…

எஸ்.ஜே.சூர்யா தற்போது ஒரு பயங்கரமான வில்லன் நடிகராக வலம் வருகிறார். “மெர்சல்”, “ஸ்பைடர்”, ‘மாநாடு” ஆகிய திரைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யா தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுந்தார். தற்போது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”, “பொம்மை” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் “பொம்மை” திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

கிளைமேக்ஸில் கடுப்பாக்கிய எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கிய திரைப்படம் “இசை”. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் சத்யராஜும் போட்டி இசையமைப்பாளர்களாக நடித்திருந்தார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திரம் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் சத்யராஜ் கதாப்பாத்திரம் இளையராஜா என்றும் கூறப்பட்டது. இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸில் இதுவரை நடந்த அனைத்தும் கதாநாயகனுக்கு வந்த கனவு என்று கூறி படத்தை முடித்துவிடுவார்கள்.

Isai

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் எஸ்.ஜே.சூர்யா. அப்போது நிருபர், “இசை படத்தின் கிளைமேக்ஸை எப்படி முடிப்பது என்றே எனக்கு தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஹீரோ கனவில் இருந்து எழுந்துவிட்டதாக கிளைமேக்ஸை முடித்துவிட்டேன். இப்போ எப்படி குறை சொல்வாங்கன்னு பார்க்கலாம்ன்னு நினைச்சேன்” என கூறினார்.

அதற்கு நிருபர், “இது ஆடியன்ஸை ஏமாற்றுவது போல் ஆகிவிடாதா?” என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு எஸ்.ஜே.சூர்யா, “உண்மையை சொல்லப்போனால் நான் வேண்டுமென்றே எந்த கிளைமேக்ஸையும் முடிவு செய்வதில்லை. நான் ஒரு பார்வையாளனாக எனது திரைப்படத்திற்கான கதையை எழுதுவேன். நான் எழுதும் ஒன்று எனக்கு போர் அடித்துவிட்டால் நான் அதனை எழுதமாட்டேன்.

வெளுத்துவிட்ட ரசிகர்

இசை படத்தின் கிளைமேக்ஸை எழுதும்போதே 50% பார்வையாளர்களுக்கு இந்த கிளைமேக்ஸ் பிடிக்கும் எனவும் மீதி 50% பார்வையாளர்களுக்கு இந்த கிளைமேக்ஸ் பிடிச்சதா பிடிக்கலையா என்பது தெரியாமலே இருக்கும் என்பதுதான் முடிவாக இருக்கும் என்று அன்றே தோன்றியது. உன்மையில் அதுதான் நடந்தது.

Isai

இந்த படம் வெளிவந்தபோது ஒரு நாள் கமலா திரையரங்கத்தில் பின்னாடி சீட்டில் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கிளைமேக்ஸில் இது வரை நடந்ததெல்லாம் கதாநாயகனின் கனவு என்று வந்தவுடன் சீட்டில் இருந்து எழுந்த ஒருவன் தன்னை படத்துக்கு கூப்பிட்டு வந்த நண்பனின் முதுகை அடித்தான். இதுவரை நடந்ததெல்லாம் கனவு என்று கூறியவுடன் அவருக்கு கடுப்பாகி விட்டது. ஆனால் அவர் எனது படத்தை வெறுக்கவில்லை” என்று மிகவும் கலகலப்பாக அப்பேட்டியில் பேசினார் அவர்.

இதையும் படிங்க: படுக்கைக்கு சம்மதிக்காததால் வாய்ப்புகளை கெடுத்தார்.. வைரமுத்து மீது மற்றொரு பாடகியும் புகார்…

Arun Prasad
Published by
Arun Prasad