×

ஒரு போன் போதும்.. பால் வீட்டிற்கே வரும்!

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பலர் வீட்டருகே இருக்கும் கடைகளுக்குச் செல்வதே பெரும் சவாலாக உள்ளது.

 

இந்த சூழலில் மக்களின் வீடுகளுக்கே நேரடியாகப் பால், பால் பொருட்களை டெலிவெரி செய்யும் வகையில் ஆவின் நிறுவனம் சில ஆன்லைன் டெலிவெரி நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் ஆவின் டீலர்களாவதற்கு டெபாசிட் தொகையை ரூ. ஆயிரமாகக் குறைத்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் எளிதாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி ஜொமேடோ, டன்ஜோ ஆன்லைன் டெலிவெரி நிறுவனங்கள் மூலம் முதற்கட்டமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News