Categories: Cinema News latest news throwback stories

விஜயை திணறடித்த அந்த ஒரு கேள்வி.. தளபதி கொடுத்த மாஸ் பதிலடி என்ன தெரியுமா.?!

தமிழ் சினிமாவில் தற்போது நமபர் 1 நடிகர் யார் என்றால் உடனே கூறிவிடலாம் அது விஜய் தான் என்று. ரஜினியை முந்திவிட்டாரா என்றால், தற்போதைய காலகட்டத்தில் ரஜினி பட வசூலை தாண்டிவிட்டார் என்றே கூற வேண்டும்.

இவர் அப்படியே ரஜினியை ஃ பாலோ செய்கிறவர் தான். தனது கதை தேர்வில், குடும்பங்கள் அனைவர்க்கும் பிடிக்கும் வண்ணம் பாட்டு , காமெடி, சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும் என்று தான் அதிகம் பார்ப்பார்.

இவரிடம் ஒரு தொகுப்பாளர், சார் நீங்கள், ஏன் கெட்டப் மாற்றி கொள்ள மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு விஜய் ஏதும் சொல்லாமல் இருக்க, மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை கேட்டவுடன், அப்படி நான் கெட்டப் மாற்றி போட்டோ எடுத்து பார்த்தேன், அது எனக்கே பிடிக்கல.

இதையும் படியுங்களேன் – சித்தப்பாவுக்கு பெரிய ஆப்பா வைச்சிட்டாரே நம்ம கார்த்தி.!? விஷயத்தை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்…

முதலில் எனக்கு அது பிடித்தால் தான் நம்பிக்கை வரும். அதனால் தான் கெட்டப் மாற்றுவதில்லை என கூறினார். அடுத்ததாக விருது வாங்கும் படங்களில் நடிக்க ஆசையில்லையா என கேட்டவுடன், அதெல்லாம் நமக்கு செட் ஆகாது. அப்படி பட்ட கதையை யாரும் என்னிடம் வந்து கூறவில்லை என்பதுபோல பேசி தொகுப்பாளரை அசரடித்து இருப்பார் தளபதி விஜய். இந்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

Manikandan
Published by
Manikandan