×

ஒரு பக்கம் கையெடுத்து கும்பிடு.. மறுபக்கம் மருத்துவருக்கு செம அடி.. அதிர்ச்சி வீடியோ

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 31ம் தேதி வரை தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

ஆனால், அதையும் மீறி வெளியே வருபவர்கள் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் போலீசார் தடியால் அடித்தும் வாலிபர்களை மிரட்டி வருகின்றனர்.

சமீபத்தில் அப்படி வெளியே வந்த  சிலரிடம் சென்னை போலீசார் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு ‘வெளியே வராதீர்கள்’ என கெஞ்சும் வீடியோ வெளியானது. 

இந்நிலையில், சென்னையில் மருத்துவர் ஒருவரும் போலீசாரிடம் தடியால் அடி வாங்கிய  சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. நான் மருத்துவர் என அவர் கூறுவதும், அதை முன்பே சொல்லியிருக்கலாமே என அந்த போலீசார் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், அவர் கூறும் முன்பே அந்த அதிகாரி அவரை அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News