×

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க வெங்காய ஊத்தாப்பம்.....வைரலாகும் ஹோட்டல் விளம்பரம்

சீனாவில் உருவான கோரோனா வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை சிரிப்பை வரவழைத்துள்ளது.
 

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் 80க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 2500 பேருக்கும் மேல் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை சீனாவில் இருந்து  கேரளா  திரும்பிய ஒரு பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காரைக்குடியில் உள்ள ஒரு ஹோட்டலில் ‘ கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கள்’ என விளம்பர பலகை வைத்துள்ளார். இதுபற்றி விளக்கமளித்துள்ள ஹோட்டல் உரிமையாளர் ‘இப்போதுள்ள தலைமுறைக்கு சின்ன வெங்காயத்தின் அருமை தெரியவில்லை. சின்ன வெங்காயம் நல்ல எதிர்ப்பு சக்தி மருந்தாகும்.  எனவே, அதை சாப்பிட்டால் எந்த நோயும் வராது. எந்த வைரஸும் தாக்கது. அதற்காகத்தான் இப்படி விளம்பரம் வைத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News