×

ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை… பாதிக்கும் மேல் போலி உறுப்பினர்கள் – அதிர்ச்சியில் ஸ்டாலின்.

சில நாட்களுக்கு முன்னதாக திமுகவில் ஆன்லைன் மூலமாக உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார்.

 

சில நாட்களுக்கு முன்னதாக திமுகவில் ஆன்லைன் மூலமாக உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார்.

இதில் ஒரு நாளுக்குள்ளாகவே ஒரு லட்சம் பேர் இணைந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேல் போலி கணக்கு எனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பெயரில் கூட உறுப்பினர் அட்டை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வைரலாக பரவி வரும் ஒரு பதிவு இதோ உங்கள் பார்வைக்கு

திமுகவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்தது எப்படி?? இணையவழி உறுப்பினர் சேர்க்கை நம்பி ஏமாந்த ஸ்டாலின்

திமுக இணைய வழி உறுப்பினர் சேர்க்கை நம்பி ஏமாந்து உள்ளது இதனால் ஸ்டாலின் உச்சகட்ட அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியை கோட்டைவிட்ட திமுக மூன்றாவது முறையாவது எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

அதில் ஒன்றாக பிரசாந்த் கிஷோர் இன் -பேக் நிறுவனத்தோடு கைகோர்த்து தேர்தல் பணிகளை கவனித்து வருகிறது. திமுக கட்சி எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நிறுவனம் தான் முடிவு செய்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாரும் நம்முடன் என்ற பெயரில் இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது திமுக.

இந்த இணைய வழி உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய 14 மணிநேரத்தில் ஒரு லட்சம் பேர் திமுகவில் இணைந்ததாக ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். ஆனால் இந்த இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் இணைந்தது என்னவோ பல போலி உறுப்பினர்கள் தான் என்பது ஒவ்வொன்றாக வெளியே வரும் ஆதாரங்கள் மூலமாக அம்பலமாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் எக்மோர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் போல திமுக உறுப்பினர் ஆக இணைந்துள்ளார். அதே போல் தமிழகத்தின் தற்போதைய முதல்வராக இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுகவில் உறுப்பினராக இணைந்தது போல அடையாள அட்டை ஒன்று வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சூனா பானா போன்ற பல திரைப்பட கதாபாத்திர பெயர்களில் இன்னும் பல உறுப்பினர் அட்டைகள் உருவாகின. இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் திமுகவை கேலி கிண்டல் செய்து வந்தனர்.

இப்படி சேர்ந்தால் ஒரு லட்சம் பேர் இல்ல ஒரே நாளில் 10 லட்சம் பேர் கூட சேரலாம் என கிண்டல் அடித்தனர். மேலும் இந்த முறையில் உறுப்பினராக சேருபவர்களிடமிருந்து கட்டாயமாக கேட்கப்படுவது மொபைல் நம்பர் மட்டும்தான்.  வேறு எந்த தகவல்களையும் இந்த இணையம் வழி உறுப்பினர் சேர்க்கையில் கட்டாயமாக கேட்கப்படுவதில்லை. உறுப்பினர்களாக சேர்பவர்கள் கொடுக்கும் தகவல்களை சரிபார்ப்பதும் இல்லை.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திமுகவில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் மீண்டும் ஒருமுறை உறுப்பினராக இணைய விண்ணப்பித்தால் அவர்களுக்கும் அடையாள அட்டை கிடைக்கிறது. இதனால் ஒருவரே பல மொபைல் எண்களை வைத்து அடையாள அட்டைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.  திமுக இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் இப்படியான பிரச்சினைகள் இருப்பதை கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் ஒப்புக்கொண்டார். மேலும் இவர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினார்.

இணையவழி உறுப்பினர் சேர்க்கையால் திமுக இப்படி ஏமாந்து போனது ஸ்டாலினுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக விவரமறிந்தவர்கள் முனுமுனுத்துக் கொள்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News