Categories: Cinema News latest news

நடிச்சது 5 நாள்.. ஆனால் காத்திருந்தது 5 வருஷம்.. என்னெல்லாம் தியாகம் பண்ணியிருக்காரு பாருங்க கரிகாலன்?..

கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலை பெரும் போராட்டத்திற்கு பிறகு திரையில் காண்பித்திருக்கிறார் மணிரத்தினம். எம்ஜிஆர், கமல், சிவாஜி இவர்களெல்லாம் தொட்டு விட்ட பொன்னியின் செல்வனை பெரும் முயற்சிக்கு பிறகு மணிரத்தினம் அதை சாதித்து காட்டியிருக்கிறார்.

5 பாகங்களாக இருக்கும் இந்த நாவலை எப்படி ஒரு முழு நீள படமாக காட்டப்போகிறார் என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது. அதுவும் புத்தகத்தை படித்த ரசிகர்களுக்கு அது ஒரு வியப்பாகவே இருந்தது. தமிழின் ஒரு பெரிய வரலாற்று நாவலாக திகழும் இந்த கதையில் எங்கேயாவது சிறு தவறு இருந்தாலும் அது ஒட்டுமொத்த கதையையும் பாதிக்கும் என்ற ஐயமும் அனைவருக்கும் இருந்திருக்கும்.

ஆனால் ஒரு சில இடங்களில் சிறு சிறு தவறுகள் தெரிந்தாலும் இவ்ளோ பெரிய நாவலை படமாக எடுத்த முயற்சிக்காகவது மணிரத்தினத்தை பாராட்ட வேண்டியது கடமை. இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறு வயது ஆதித்ய கரிகாலனாக நடித்த நடிகர் சந்தோஷ் அந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக 2018 ஆம் ஆண்டு ஆடிசனில் வந்தாராம். கிட்டத்தட்ட 5 வருஷமாக இந்த பட வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் படத்தில் நடித்ததோ வெறும் 5 நாள்கள் தானாம். மேலும் படத்திற்காக களறி, சிலம்பம், மல்யுத்தம் என அனைத்து கலைகளையும் கற்றுக் கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால் சிறு வயது கரிகாலனாக இருக்கும் போது போரில் சண்டையிடும் மாதிரியான எந்த காட்சியும் படத்தில் இடம் பெறவில்லை. அவரை வைத்து அந்த மாதிரியான சீனும் எடுக்கவில்லையாம். ஏதோ கற்ற கலைகள் வேறு எந்தப் படத்திற்காக உதவும்.

இதையும் படிங்க : நான் வெயிட் போடுறதுக்கு காரணமே இதுதான்!.. அஜித் சொன்ன ரகசியம்.

மேலும் இரண்டு வருடங்களாக படத்திற்காக முடியை வளர்த்தாராம். மேலும் விக்ரம் எந்த மாதிரி ஃபீல் பண்ணுவார் என்பதை உள்வாங்கி சிறு வயது ஆதித்ய கரிகாலனாக நடித்தாராம். ஆனால் ஒரு நாள் கூட இன்று வரை விக்ரமை நேரில் பார்க்க வாய்ப்பே வரவில்லையாம் சந்தோஷுக்கு.

Published by
Rohini