×

என் புருஷனுக்கு வழுக்கை இருப்பதே திருமணத்துக்கு பின்புதான் தெரியும் – போலிஸில் புகார் கொடுத்த மனைவி!

மும்பையில் வழுக்கைத் தலை இருப்பதை மறைத்து திருமணம் செய்துகொண்ட நபரின் மேல் அவரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

 

மும்பையில் வழுக்கைத் தலை இருப்பதை மறைத்து திருமணம் செய்துகொண்ட நபரின் மேல் அவரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

மும்பையில் உள்ள நாய நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண் ஒருவர் தன் கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறியுள்ளார். அந்த புகாரில் ’எனக்கும் என் கணவருக்கும் கடந்த மாதம்தான் திருமணம் ஆனது. அவருக்கு வழுக்கைத் தலை இருந்துள்ளது. ஆனால் அதில் விக் வைத்து என்னை ஏமாற்றியுள்ளார். இந்த விஷயம் எனக்கு திருமனத்துக்கு பின்னர்தான் தெரிய வந்தது. மேலும் இயற்கைக்கு புறம்பான வகையில் என்னை உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துகிறார்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து போலிஸார் கணவர் பற்றி விசாரிக்க அந்த நபரோ முன் ஜாமீன் வேண்டி விண்ணப்பித்துள்ளார். மேலும் தனக்கு வழுக்கை இருப்பதை மாமியாரிடம் திருமணத்துக்கு முன்னரே கூறியதாகவும் அவர் அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என சொன்னதாகவும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் இப்போது வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News