Categories: Cinema News latest news throwback stories

ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை… எந்த நடிகைக்கும் அதை பண்ண தைரியம் இல்ல!..

தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுக்கும் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பல படங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய ஹிட் கொடுக்க கூடியவை. சினிமாவில் பல வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்து கஷ்டப்பட்டு நடிக்க வந்தவர் ரஜினிகாந்த்.

rajini

தமிழ் சினிமாவில் மிகவும் எளிமையான ஒரு நடிகராக ரஜினிகாந்த் அறியப்படுகிறார். சினிமாவிற்கு வந்த நாள் முதல் இப்போது வரை அவரது ஆடை போன்ற விஷயங்களில் எளிமையை காண முடியும். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் சாதாரணமாக நிகழ்ச்சிகளில் தோன்றுவார் திரைப்படங்களில் மட்டுமே ரஜினிகாந்த் அதிகம் மேக்கப்புடன் தோன்றுவதை பார்க்க முடியும்.

இருவருக்கும் உள்ள தைரியம்:

அதேபோல நடிகர் அஜித்தும் ஒரு எளிமையான மனிதராக தமிழ் சினிமாவில் அறியப்படுகிறார். அஜித் படங்களில் கூட நிஜத்தில் அவரது முகம் எப்படி இருக்கிறதோ, அப்படியே வெளிப்படுத்துகிறார். அஜித் தனக்கு முடி நரைக்க துவங்கிய பிறகு அவரது திரைப்படங்களிலும் நரைத்த முடியுடன் நடித்து அதை ஒரு ஸ்டைலாக மாற்றினார்.

இப்படி தமிழ் சினிமாவில் தங்களது நிஜ முகத்தை எந்தவித மேக்கப்பும் இல்லாமல் வெளிப்படுத்தக்கூடிய நபர்களாக அஜித்தும் ரஜினிகாந்தும் இருக்கின்றனர். கமலஹாசன், விஜய் போன்ற மற்ற நடிகர்கள் அனைவருமே மேக்கப், டை போன்றவற்றை பயன்படுத்தி அழகுப்படுத்திக் கொண்டு அவர்களது முகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இடையில் ஒரு பேட்டியில் நடிகை சீதா இதைப்பற்றி கூறும் பொழுது தமிழ் சினிமாவிலேயே அஜித்திற்கும் ரஜினிக்கும்தான் இந்த மாதிரியான ஒரு தைரியம் உண்டு. சினிமாவில் உள்ள எந்த ஒரு நடிகைகளும் இப்படி மேக்கப் இல்லாமல் ஒரு பேட்டியில் பங்கெடுக்க முடியாது. அதற்கு எந்த நடிகைக்கும் தைரியம் கிடையாது. அந்த வகையில் அஜித்தும் ரஜினியும் பாராட்டுக்குரியவர்கள் என கூறியுள்ளார்.

Rajkumar
Published by
Rajkumar