2026-ல் ரிலீசான 139 படங்களில் 16 படங்கள் மட்டுமே ஹிட்!.. தமிழ் சினிமா அப்டேட்!..
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய தமிழ் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி வருகிறது. அதிலும் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் வியாழக்கிழமைகளில் கூட ரிலீஸ் செய்து விடுகிறார்கள்.
ஏனெனில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் வசூலை பார்த்து விடலாம் என்பதுதான் தயாரிப்பாளர்களின் கணக்காக இருக்கிறது. அதேநேரம் அப்படி வெளியாகும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை பெறுகிறதா என்றால் இல்லை.
சில படங்கள் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுகிறது. இந்நிலையில் 2026ம் வருடம் ஜூலை வரை 139 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது எனவும் அதில் 16 படங்கள் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது எனவும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது வெளியான படங்களில் 11 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கருப்பு, ஜனநாயகன், கட்டாகுஸ்தி 2 போன்ற படங்களின் வெற்றியால் மந்த நிலையில் இருந்த தமிழ் சினிமா மீண்டும் எழுச்சி கண்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பு தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. மேலும் வரும் மாதங்களில் வெளியாகவுள்ள பெரிய பட்ஜெட் படங்களால் இந்த வளர்ச்சி அதிகரிக்கும்’ எனவும் சங்கம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
