×

ஒண்ணு கூடிட்டாங்கய்யா... ஒண்ணு கூடிட்டாய்ங்க! ரஜினி கமல் கூட்டணி..

ரஜினி கமல் வருகின்ற தேர்தலில் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நகர்ப்புறங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றார். உள்ளாட்சித் தேர்தலை அக்கட்சி புறக்கணித்தாலும் சட்ட மன்றத் தேர்தலுக்கான் பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறது.

 கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தேவைப்பட்டால் ரஜினியுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், 

“சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத மக்கள் நீதி மய்யத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளோடு கூட்டணி அமைப்போம். ரஜினிகாந்த்தும் நானும் தமிழ்நாட்டின் மேம்பாடு என்பதைத் தான் பேசிவருகிறோம். அதில் கொள்கை ரீதியான மாறுபாடு இருக்கலாம் என்பதெல்லாம் பரவலாக இருக்கக்கூடிய பேச்சு. 

ஆனால் சமீபத்தில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் தமிழகத்தின், தேசத்தின் நலன் நோக்கிய அணி சாரா நிலை இருப்பதாக உள்ளது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது” என்றார்.

இனி என்னவெல்லாம் நடக்க போகிறதோ!

From around the web

Trending Videos

Tamilnadu News