×

கொரோனாவால் போன வாய்ப்பு - எருமை மாடு தொழிலில் இறங்கி பிரபல நடிகை

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தொழில்கள் முடங்கியுள்ளன.இதில் திரையுலகமும் ஒன்று, திரைப்பட தொழிலாளர்கள், சிறு சிறு வேடங்களில் நடிப்பவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்த மஞ்சு பிள்ளை எருமை மாடு வளர்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு இல்லமால் போனதால் இந்த தொழிழில் இறங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் திரைப்படம் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.

manju

மஞ்சு பிள்ளை கடந்த 2000ம் வருடம் சுதித் வாசுதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். தான் மாடு வளர்க்கும் தொழில் இறங்கிவிட்டது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News