×

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு... முதல்வர்களுடன் மோடி கலந்துரையாடல்!

ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட இன்னபிற தகவல்களை ஆலோசிக்க முதல்வர்களுடன் இன்று காணொலிக்காட்சி வழியாக பிரதமரின் மெய்நிகர் கூடுகை (Virtual Meeting) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

 

நாடு முழுக்க அமலில் இருக்கும் இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே மாதம் 3ஆம் தேதியுடன் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால், தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே இருக்கிறது.

இதனையிட்டு, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில், நாடு முழுக்க இருக்கும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார்.

மார்ச் மாதம் 25ஆம் தேதி 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவுக்கு வரவிருந்த நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் ஒரு காணொலிக் காட்சிக் கலந்தாய்வு நடத்தினார் பிரதமர் நரேந்திரமோடி. அதன் பிறகு, முதல்வர்களின் கோரிக்கையை ஏற்றே ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை நடைபெறவிருக்கும் காணொலிக் காட்சி கூடுகையிலும், ஊரடங்கு நீட்டிப்பு குறீத்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல மாநிலங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்திருக்கும் வேளையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு முன்பு இரண்டு முறை முதல்வர்களுடன் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. நிதியுதவி, சலுகைகள், வரிக்குறைப்பு, மின்கட்டண விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 

From around the web

Trending Videos

Tamilnadu News