×

நாளுக்கு நாள் அதிகமாகும் எதிர்ப்பு – பல்டி அடித்துவிடலாமா என யோசிக்கும் மக்கள் செல்வன்!

நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதற்கு எதிராக பல முனைகளில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.

 

நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதற்கு எதிராக பல முனைகளில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, ஒப்பந்தம் ஆன நாளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தன.  இது சம்மந்தமாக விஜய் சேதுபதிக்கு திரைத்துறையில் இருந்தே கூட இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் பாடலாசிரியர் தாமரை ஆகியோரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் இத்தனை நாள் தான்  சேர்த்து வைத்த தமிழ் உணர்வாளன் என்ற இமேஜ் காலியாகிவிடுமோ என்ற அச்சம் இப்போது அவருக்கு எழுந்துள்ளதாக தெரிகிறது.

அதனால் இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாகதான் இரு நாட்களுக்கு முன்னர் வெளியான 800 படத்தின் மோஷன் போஸ்டரை கூட அவர் தன் சமூகவலைதள பக்கத்தில் ஷேர் செய்யவில்லை என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News