×

இது மனுஷனா... இல்லையா... நெட்டிசன்களைக் குழப்பிய வைரல் போட்டோ

பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்த போட்டோ நெட்டிசன்களைக் குழப்பியிருக்கிறது. 
 

ஆப்டிகல் இலுயூஷன் எனப்படும் ஒளியியல் மாயையால் நாம் பல நேரம் குழம்பிவிடுவோம். அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது சமூகவலைதளங்களில் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர் நிகோலஸ் தாம்சன் என்பவர் டிவிட்டரில் பகிர்ந்த போட்டோ ஒன்று அப்படித்தான் நெட்டிசன்களைக் குழப்பியிருக்கிறது. அவர், `இன்றைக்கான ஆப்டிக்கல் இலுயூஷன். முதலில் ஒரு மனிதர் காட்டுக்குள் ஓடுவது போன்று உங்களுக்குத் தெரியும்.. ஆனால் அதற்குப் பின்னர்...’’ என்ற கேப்ஷனுடன் தாம்சன் அந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்த போட்டோவை மேலோட்டமாகப் பார்க்கையில் பனிபடர்ந்த காட்டுக்குள் மனிதர் ஒருவர் ஓடிச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது போன்ற மாயத் தோற்றம் ஏற்படுகிறது. இந்த போட்டோ குறித்து நெட்டிசன்கள் பலரும் ஆர்வமாக விவாதித்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் அந்த போட்டோவில் இருப்பது கருப்பு நிற நாய் ஒன்று எதிர்திசையில் காட்டிலிருந்து வெளியே வருவது போன்ற காட்சி. இதைப் பார்த்ததும் பலரும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தி வருகின்றனர். இந்த போட்டோவை உற்றுக் கவனித்தால் கருப்பு நிற நாய் வெளியே வருவது உங்களுக்கும் தெரியும்.

From around the web

Trending Videos

Tamilnadu News