ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு 76 லட்சம் வருமானம்!.. யார் இந்த ஓரி?..

 
orry

தற்போது எல்லோரின் கையிலும் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. அதில் பெரும்பாலானோர் ரீல்ஸ் வீடியோக்களை அதிகமாக பார்க்கிறார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் பெரும்பாலும் பலரின் விருப்பமாக இருக்கிறது.

குறிப்பாக இப்போதைய இளைஞர்கள் பெரும்பாலான நேரங்களை ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் செலவிடுகிறார்கள். எனவே இதை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
சுவாரசியமான வீடியோக்களை பதிவேற்றி அதன் மூலம் அதிகமான ஃபாலோயர்ஸ்களை பெற்று அதில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் ஓரி. இவரின் நிஜப்பெயர் ஓர்கன் அவத்ரமணி. இவர் மும்பையை சேர்ந்தவர்..

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். இவரின் ஒவ்வொரு வீடியோக்கும் பல லட்சம் லைக்ஸ்களை குவிக்கிறது. அதேபோல் பாலிவுட் நடிகைகள் பலரும் இவருடன் ரீல்ஸ் வீடியோக்களில் பங்கேற்கிறார்கள். புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.

குறிப்பிட்ட எந்த தொழிலும் இல்லாத நிலைகளும் ஓரி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காக ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ வெளியிட்டதற்கு 76 லட்சம் வருமானம் பெற்றதாக அவர் சமீபத்தில் கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

From Around the web