×

தனுஷ் 43 படத்தின் வேற லெவல் பாடல்கள்- ஜி வி பிரகாஷ் அப்டேட்!

தனுஷின் 43 ஆவது படத்துக்கான பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

தனுஷின் 43 ஆவது படத்துக்கான பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் தற்போதைய படங்கள் அனைத்தையும் இயக்க திறமையான இயக்குனர்களை ஒப்பந்தம் செய்துள்ளார். ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இதையடுத்து தனது அடுத்த படத்த்தை இயக்கும் வாய்ப்பை கார்த்திக் நரேனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த படம் தனுஷின் 43 வது படமாக உருவாகவுள்ளதால் தற்போது D43 என அழைக்கப்பட்டு வருகிறதுஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் ’வேற லெவல் பாடல்கள் தனுஷ் 43 படத்துக்காக இசையமைத்து தயாராகிவிட்டன. பாடல்களை DFire மற்றும் விவேக் ஆகியவர்கள் எழுதியுள்ளனர். அனைத்து விவரங்களும் குவாரண்டைனுக்குப் பிறகு அறிவிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார். மேலும் ஷூட்டிங்கும் கொரோனா லாக்டவுன் முடிந்ததும் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News