Categories: latest news OTT

மாஸ்… இந்த வார ஓடிடி ரிலீஸில் ஆதிக்கம் காட்டும் தமிழ் படங்கள்… லிஸ்ட் வேணுமா?

OTT Release: ஓடிடி ரிலீஸில் இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்கள் உள்ளிட்ட சூப்பர் லிஸ்ட் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது ஒவ்வொரு வாரமும் ஓடிடி ரிலீஸுக்கு அதிகமாக காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் அதிக தமிழ் படங்கள் ரிலீஸாக இருக்கிறது.

நடிப்பில் அசத்திய மோகன்லால் முதல் முறையாக இயக்கி நடித்த திரைப்படம் பரோஸ். அந்தோணி பெரும்பாவூர் தயாரிப்பில் இப்படத்துக்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்க பரோஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

70 வயதை கடந்தும் நடிப்பில் மிரட்டி வரும் சரத்குமார் நடிப்பில் 150வது திரைப்படம் தி ஸ்மைல் மேன். இன்வெஸ்டிகேட்டிவ் ஜானரில் இத்திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது. காவல்துறை அதிகாரியாகவும் அம்னீசியா நோயாளியாகவும் தனி கவனம் செலுத்தி இருக்கிறார்.

மாதவன் நடிப்பில் கிரைம் திரில்லர் திரைப்படமான ஹிசாப் பாரபர் ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. 2400 கோடி ஸ்கேமை டிக்கெட் பரிசோதகர் கண்டுபிடித்து அந்த முதலாளிக்கு எதிராக போராடிக்கும் கதை. இந்த ஜானர் ஏற்கனவே ஹிட் அடித்திருப்பதால் இதுவும் வரவேற்பு பெறும் என நம்பப்படுகிறது.

ஓவர் பில்டப் இல்லாமல் சிம்பிளான ஒரு மனிதன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான திரு மாணிக்கம் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

பார்த்து கொள்ளவே செய்யாத இரண்டு வெவ்வேறு நபர்கள் கனவுகளில் சந்தித்து காதல் செய்கின்றனர். அந்த கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஸ்வீட் டிரீம்ஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்