Connect with us

latest news

OTT: அடுத்த சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் வதந்தியின் சீசன் 2 ரெடி… இந்த முறை கோலிவுட்டின் அடுத்த ஹீரோவா?

OTT: தமிழில் சூப்பர்ஹிட் அடித்த வதந்தி வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி உள்ளது.

வதந்தி: தி ஃபேக் ட்ருத் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான பரபரப்பான தமிழ் வெப் சீரிஸ். திடீரென ஒரு இளம்பெண் மரணமாகி விட அதை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி ஒருவர். அதன் பின்னணி என்ன என்பதைப் பற்றிய சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் எஸ். ஜே. சூர்யா சப்-இன்ஸ்பெக்டராக நடித்து அசத்தி இருக்கிறார். நடிப்பு அரக்கன் என்பதால் அவரின் செம்மையான நடிப்பு கதைக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நடித்து இருந்தனர்.

இந்த தொடரின் இயக்குனர் அந்தோனி பாக்கியராஜ் படத்தில் தன்னுடைய கைவசத்தினை காட்டி இருக்கிறார். படத்தினை புஷ்கர் & காயத்ரி தயாரித்து இருந்தனர். எடிட்டிங், பிஜிஎம், மற்றும் ஒளிப்பதிவு எல்லாமே தரமான முறையில் இருந்தது.

இந்நிலையில் வதந்தி இரண்டாவது சீசன் தொடங்கப்பட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இரண்டாவது சீசனுக்கு தி மிஸ்டரி ஆஃப் மொடக்கத்தான் மணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் எஸ் ஜே சூர்யாவும் இந்த சீசனுக்கு சசிகுமாரும் களமிறங்கி இருக்கின்றனர்.

6 எபிசோடுகளை கொண்டுள்ள இந்த சீசன் தற்போது பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் மொத்த ஷூட்டிங்கையும் முடித்து அடுத்தாண்டு வெப் சீரிஸை வெளியிட முடிவெடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே சூப்பர்ஹிட் அடித்த இந்த வெப்சீரிஸ் தற்போது சீசன் 2 உருவாவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top