Connect with us

latest news

OTT Watch: பொண்ணுங்களா இது? ஆத்தாடி… ஜோதிகாவின் பாலிவுட் டப்பா கார்டல் பாத்திருக்கீங்களா?

OTT Watch: பிரபல பாலிவுட் வெப்சீரிஸான டப்பா கார்டல் தொடரினை பார்ப்பது வொர்த்தா, வெத்தா என்பது குறித்த திரைவிமர்சனம் இங்கே.

டப்பா கார்டல் என்பது 2025-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள த்ரில்லர் வெப் சீரீஸாகும். 1960களின் மும்பையை பின்னணியாகக் கொண்ட இந்த கதையில், நடுத்தர வர்க்க பெண்களான ஷாலினி பாண்டே மற்றும் நிமிஷா ஒரு சாதாரண டிபன் சப்ளை சேவையைத் தொடங்குகிறார்கள்.

முதலில் ஹெர்பல் வயகராவை கொடுத்து சம்பாரிக்கும் இவர்கள் தங்கள் தங்கும் அபார்ட்மெண்ட்டில் வேலை செய்ய முடியாததால் தனி அப்பார்ட்மெண்ட் செல்கின்றனர். அங்கு நிமிஷாவின் காதலர் மோசமான வீடியோவை எடுத்து வைத்து கஞ்சாவை கை மாத்த சொல்கின்றனர்.

அப்போது அந்த வீட்டை எடுத்து கொடுத்த புரோக்கர் அஞ்சலி ஆனந்துக்கு இந்த விஷயம் தெரிய மூவரும் கூட்டணி போட்டு இதை செய்கின்றனர். ஒரு கட்டத்தில் பெரிய பிரச்னையில் சிக்க அவர் மாமியார் ஷபானா அஸ்மி உள்ளே வருகிறார். அவரோ முன் ஒரு காலத்தில் பெரிய கடத்தல் டீமில் இருந்த விஷயம் தெரிய வெப்சிரீஸ் பரபரப்பாகி விடுகிறது.

இவர்கள் சம்பாரித்த பணத்தினை ஜோதிகாவின் பொட்டிக்கில் போட இன்னொரு பிரச்னை தலை தூக்குகிறது. இதில் இருந்த இந்த ஐவர் எப்படி தப்பித்தார்கள்? போலீஸ் இவர்களை சிக்க வைத்ததா என்ற கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது.

முழுக்க முழுக்க பெண்களின் நடிப்பில் எதிரிகளை எதிர்க்கும் அவர்களின் புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு வலுவான கதையை சொல்லுகிறது. சீரியசாக தொடங்கிய கதை இடையே கொஞ்சம் அலுப்பை தட்டினாலும் கடைசியில் சரியாக சென்று முடிகிறது.

கடைசியில் ஒரு ட்விஸ்ட்டுடன் இன்னொரு சீசனுக்கு வழி விட்டு முடித்துள்ளனர். ஐந்து பெண்களுமே நடிப்பில் சக்கை போடு போட்டுள்ளனர். அதிலும் வேலைக்கார பெண்ணாக வரும் நிமிஷா அப்ளாஸ் தட்டும் அளவுக்கு நடிப்பை கொட்டு விட்டார்.

7 எபிசோட்களை கொண்ட இந்த சீரிஸ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம டைம் பாஸாக அமையும். மற்ற ஷாலினி பாண்டே, நிமிஷா, அஞ்சனா, ஷபானா இடையே ஜோதிகா நடிப்பில் சொதப்பி இருப்பது மட்டுமே மைனஸாகி இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top