1. Home
  2. Latest News

OTT Watch: சீரியல் மனைவிகளை சரி செய்யும் கணவர்கள்… சுபம் படம் வொர்த்தா? வேஸ்ட்டா?


OTT Watch: தமிழ் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுப்பது என்னவோ வாரா வாரம் வரும் ஓடிடி அப்டேட்கள் தான். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் சுபம் படத்தின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் தொகுப்புகள்.

சுபம் திரைப்படம் வித்தியாசமான ஹாரர் காமெடி கதையை பேசுகிறது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படத்தில் மூன்று நண்பர்களைச் சுற்றிய கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய கேபிள் டிவி சேவையில் மக்கள் பெரிதும் விரும்பும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகிறது.

ஆனால் அந்த சீரியலைப் பார்த்த பெண்கள், பழைய காலத்தில் உயிரிழந்த ஒரு ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் விழுகிறார்கள். அந்த ஆவி, அந்த சீரியல் கதைக்குள் தன்னை பிரதிபலிப்பதைக் கண்டுபிடித்து, அதற்குள் தன் உணர்வுகள் மூலம், பெண்களை வசப்படுத்த ஆரம்பிக்கிறது.

இந்த விசித்திர சம்பவங்களை கண்ட மூன்று நண்பர்கள், யாரிடமும் உதவி கிடைக்காத சூழலால், அந்த சீரியலின் முடிவை மாற்றுவதன் மூலம் அந்த ஆவியின் கட்டுப்பாட்டை நிறுத்த முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சி வெற்றியடைந்ததா என்பது தான் கதை.

ஹாரர் காமெடியில் உருவாகிய இந்த படத்தில், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் புராண நம்பிக்கைகளை சிரிப்பாக எடுத்து சொல்ல முயற்சி செய்கிறது. இப்படத்தினை சமந்தா தயாரித்து ஒரு கேமியோ காட்சியிலும் நடித்து இருக்கிறார்.

இப்படம் குறும்படத்திற்கான கதை மட்டுமே. இதை முழுநீள படமாக எடுப்பதில் இயக்குனர் மிஸ் செய்து இருக்கிறார். பல இடங்களில் இழுவையாக அழுப்பை தருகிறது. புதிதான கதை என்றாலும் திரைக்கதையில் பெரிய சொதப்பல். திரைக்கதையே காணும் என்றே சொல்லலாம்.

சுமார் 2 மணி 5 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தினை எடுக்காமல் இருப்பதே நல்லது. அதிலும் சமந்தா கேமியோவிற்கு ஒரு மரியாதை இல்லாமல் போச்சு. தமிழ் டப்பிங்கில் ஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸ் இடம்பெற்று இருக்கிறது. சாய்ஸ் உங்க கையில்!

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.