Connect with us

Cinema News

ராயன் முதல் கல்கி வரை… இந்த வார ஓடிடியில் என்ன பார்க்கலாம்? நோட் பண்ணிக்கோங்க!..

OTT Release:  தமிழ் சினிமா ரசிகர்கள் வார இறுதியில் என்ன திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்த காலம் மாறி தற்போது இந்த வார இறுதி ஓடிடி ரிலீஸ் அப்டேட்டுக்காக காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த வார இறுதிக்கு இரண்டு முக்கிய திரைப்படங்கள் ரிலீஸில் காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படம் ப்ரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இப்படத்தில் அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: பா.ரஞ்சித்தின் அடுத்த வில்லன் ஆர்யாவே.. ஆனா ஹீரோ யாரு தெரியுமா?

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 23ந் தேதி அமேசான் பிரைமில் இப்படம் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து, கல்கி 2898ஏடி சயின்ஸ் பிக்சன் திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

Raayan

கடவுள் விஷ்ணுவின் அவதாரத்தை மையமாக வைத்த உருவாக்கப்பட்டுள்ள படம் 2024 ஆம் ஆண்டில் உச்சபட்ச வசூலை குவித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஐ எம் டி பி 7.6 புள்ளிகளை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் நெட்ப்ளிக்ஸ் மற்றும் பிரைம் என இரண்டிலும் வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!…

 ராயன் மற்றும் கல்கி என இரண்டு திரைப்படங்களுமே திரையரங்க வெளியிட்டில் நல்ல விமர்சனங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் போட்டியில் என்ன மாதிரியான விமர்சனங்களை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இந்த இரண்டு படங்களும் இல்லாமல் மேலும் சில இந்தி மற்றும் ஆங்கில வெப்சீரிஸ்களும் இந்த வார இறுதியில் வெளியாக இருக்கிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top