
latest news
OTT: ஃபகத் பாசிலுடன் மோதும் விஜய் சேதுபதி… இந்த வார ஓடிடி படங்களின் சூப்பர் அப்டேட்!
OTT: தென்னிந்திய சினிமாவில் வாரா வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த இந்த வார அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த வாரம் இந்தியில் இருந்து மா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாரீசன் திரைப்படமும் இதே ஓடிடியில் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.
ஆங்கில திரைப்படமான ஆன்ஸ்விஃப்ட் ஹார்சஸ், தி355 படங்களும் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. அமேசான் பிரைம் ஓடிடி தொடரில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமான தலைவன் தலைவி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.

பவன் கல்யாண் நடிப்பில் பேன் இந்தியா திரைப்படமான ஹரிஹரவீரமல்லு திரைப்படமும் இதே ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. பெங்காலி அமர்பாஸ் திரைப்படம், கன்னட திரைப்படமான சோதா உள்ளிட்ட படங்கள் ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
ஆஹா ஓடிடியில் பேன் இந்தியா திரைப்படமான Kotha pallilo Okappudu வெளியிடப்படுகிறது. தமிழ் திரைப்படமான பேரன்பும் பெருங்கோபமும் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது. சன் நெக்ஸ்ட் ஓடிடியில் Kapata Nataka Sutradhari என்ற கன்னட படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆங்கில படமான The Alto Knights மற்றும் Eenie Meanie ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் படங்களில் இந்த முறை நல்ல ரிலீஸ் திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த வார விடுமுறை களைக்கட்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.