Categories: latest news OTT

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..

நடிகர் சந்தானம் நடிப்பில் சென்ற மே மாதம் 16ம் தேதி வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை, சந்தானம் படத்தை விட சூரியின் மாமன் படம் வசூலை அள்ளியது. இந்iநிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒடிடி ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா தயாரிப்பில் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த கோவிந்தா பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதன் காரணமாக நீக்கப்பட்டது.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் ஒரு திரைப்பட விமர்சகராகவும் இப்படத்தில் ஒரு முகம் தெரியாத இயக்குனர் அழைத்ததற்காக மர்மமான திரையரங்கிற்கு செல்கிறார். பின்னர் திரைப்படம் தொடங்கியதும் சந்தானமும் அவர் குடும்பமும் படத்திற்குள் மாட்டிக்கொள்கின்றனர். தனது குடும்பத்தை காப்பாற்ற, மர்மமான புதிர்களை தீர்த்து, ஆவியின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்று கதை செல்கிறது. இப்படம் நகைச்சுவை, திகில் மற்றும் திரைப்பட விமர்சகர்களை கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் ஜூன் 13ம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் ரசிகர்களுக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என்றாலும், ஓடிடி ரசிகர்களுக்கு நல்லாவே இந்த படம் வொர்க்கவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுடன் வீட்டில் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். ஆபாச காட்சிகள் பெரிதாக ஏதுமில்லை.

Saranya M
Published by
Saranya M