×

எங்கள் மகன் இன்னும் இறக்கவில்லை ! பெற்றோரின் நெகிழ வைக்கும் செயல் !

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர் அவருக்கு இறுதி சடங்கு செய்யவும் மறுத்துள்ளனர்.

 

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர் அவருக்கு இறுதி சடங்கு செய்யவும் மறுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சரத்குமார். 22 வயதாகும் இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 11 ஆம் தேதி இவர் அலுவலக வேலையை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். அப்போது  எதிர்பாராத விதமாக அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அவர் ரொம்ப நேரமாக சிகிச்சை கிடைக்காமல் உயிருக்குப் போராடியுள்ளார். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போனதால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது உடல் உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானம் கொடுக்கப் பட்டுள்ளன. அவரின் உறுப்பை இப்போது 7 பேர் பெற்றுக் கொண்டுள்ளனர். அதனால் தங்கள் மகன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்று அவரது பெற்றோர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த மறுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News