×

தலைவி படம் ஓடிடியில் இமாலயத் தொகைக்கு விற்பனை! கங்கனா பகிர்ந்த ரகசியம்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனது நடிப்பால் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றவர். அவர்  தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டதட்ட எல்லாப் பணிகளும் முடிந்துள்ள இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதைக் கங்கனா ரனாவத் மறுத்துள்ளார்.

அதில் ‘எல்லா படங்களையும் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய முடியாது. தலைவி படம் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது. தலைவி படம் தியேட்டரில்தான் வெளியாகும். இந்த படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பதிப்புகள் ஓடிடி தளத்தில் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார். இந்த படத்தை ஏ எல் விஜய் இயக்க பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News