×

செம தில்லுதான்!.. அட செல்லமே விஜயை பாராட்டிடுச்சு!... சிங்கிள் டிவிட்டில் தெறிக்கவிட்ட ஓவியா....

 
செம தில்லுதான்!.. அட செல்லமே விஜயை பாராட்டிடுச்சு!... சிங்கிள் டிவிட்டில் தெறிக்கவிட்ட ஓவியா....

தமிழகமெங்கும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று மாலை 7 மணிக்கு முடிவடைந்தது.. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதற்கிடையில், நீலாங்கரையில் வசிக்கும் நடிகர் விஜய் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வாக்களிக் சென்றார். அவர் காரில் வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் சைக்கிளில் சென்று வாக்களித்தார். அவரை கண்ட ரசிகர்கள் இருசக்கர வாகனங்களில் அவரை சுற்றி வளைத்து அவருடனே சென்றனர். அதில் பலரும் செல்போனில் அவரை வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஓவியா, விஜய் சைக்கிளில் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து ‘தைரியம்’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News