×

ஓவியா நிலைமையை பார்த்தீர்களா? வாய்ப்பு கிடைக்கலையாம்... பரிதாபப்படும் ரசிகர்கள்!

தங்களின் கெரியர் பிக்கப் ஆகும் என்கிற நம்பிக்கையில் தான் பலரும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு சிலரின் கெரியர் தான் பிக்கப் ஆனது. மற்றவர்களின் கெரியரில் எந்தவித மாற்றமும் இல்லை.

 

தன் கெரியர் சூடுபிடிக்கும் என்கிற நம்பிக்கையில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஓவியா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முதலில் அந்த ஓவியாவை பார்வையாளர்கள் திட்டியபோதிலும் பின்னர் ஏற்றுக் கொண்டனர்.

பிக்பாஸிலிருந்து சந்தோஷமாக வெளியே வந்த ஓவியா கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவோம் என்று நம்பினார். ஆனால் பாவம் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஓவியாவும் பாரம்பரிய உடை, மாடர்ன் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுகிறார். அப்படியும் அவருக்கு வாய்ப்புகள் வருவது இல்லை.

ஓவியா வெளியிடும் புகைப்படங்களை பார்த்து அவரின் ஆர்மிக்காரர்கள் தான் ஆஹோ, ஓஹோ என்கிறார்கள். மற்றவர்களோ, நீங்கள் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறீர்களோ அவ்வளவு நல்லது என்று தெரிவித்துள்ளனர்.

ஓவியா அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிடுவதை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் அவரின் நிலையை பார்த்து பாவப்படுகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News