×

கதம் கதம்... ஆரவ் மேட்டர் அவ்ளோதான்... ஓவியா பேசும் வீடீயோ
 

ஆரவ் திருமணம் பற்றி ஓவியா முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

பிக்பாஸ் மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துவிட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்வுடன் ஓவியா காதலில் விழுந்தார்.

ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூற,  அதனை ஏற்று கொள்ளமுடியாமல் மிகுந்த மனவருத்தத்துடன் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின் அந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இருவரும் அடிக்கடி ஊர்சுற்றுவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூகவலைத்தளத்தில்  தீயாக பரவியது.  

இந்நிலையில், திடீரென ஆரவ் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கும் ஓவியா செல்லவில்லை.

இதுபற்றி ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ள ஓவியா ‘ ஆரவின் திருமணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது கேரளாவில்தான் இருந்தேன். ஆனாலும், திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. எனக்கும், அவருக்கும் இடையே என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. தற்போது அவருக்கு அழகான ஒரு வாழ்க்கை அமைந்துள்ளது. என் பழைய காதலை பற்றி இனிமேல் கேட்க வேண்டாம்’ என ஓவியா அதில் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News