Categories: Cinema News latest news

சண்டையெல்லாம் ஓவர்!.. தேங்க்யூ மாமே.. சந்தோஷ் நாராயணனின் திடீர் மாற்றத்தை கவனிச்சீங்களா!..

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ நாராயணன் அறிமுகமாகி அந்த “ஆடிப்போனா ஆவணி.. என் ஆளை மயக்கும் தாவணி”, “நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா” பாடல்கள் மூலம் பிரபலமானார்கள்.

தொடர்ந்து இணைந்த கைகளாக மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களுக்கு இணைந்து இசையமைத்து வந்தனர். ஆனால், திடீரென இருவருக்கும் இடையே பெரிய விரிசல் விட்டது.

இதையும் படிங்க: சலார் பிரபாஸா இது!.. படத்துல பிரசாந்த் நீல் ரொம்ப பட்டி டிங்கரிங் பார்த்துருப்பாரு போல.. தப்பிக்குமா?

10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த பா. ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய தெருக்குரல் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள் பாடகி தீ துரோகம் செய்து விட்டதாக வெடித்த சர்ச்சை பெரிய பிரச்சனையை கிளப்பியது. நட்சத்திரம் நகர்கிறது, படத்தில் தென்மா எனும் இசையமைப்பாளரை அறிமுகம் செய்தார்.

சியான் விக்ரமை வைத்து பா. ரஞ்சித் இயக்கி உள்ள தங்கலான் படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைப்பாளர். இந்நிலையில், “நீயே ஒளி” எனும் கச்சேரியை நடத்த உள்ள நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் ஒரு மாதிரியான கேரக்டர்! இவ்ளோ நாள் எங்கப்பா இருந்தீங்க? பிரபலம் கொடுத்த ஷாக்

அந்த பதிவை பார்த்த சந்தோஷ் நாராயணன் ”தேங்க்யூ மாமே.. நம்ம பட பாடல்கள் தான் கச்சேரியில் கலக்கப் போகுது” என சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். மேலும், தங்கலான் அப்டேட் கொடுங்க ப்ளீஸ் என்றும் ரசிகரை போல அவர் கேட்டதை பார்த்த ரசிகர்கள் நண்பர்கள் மீண்டும் இணைந்து விட்டது மகிழ்ச்சி என பதிவிட்டு வருகின்றனர். அப்படியே தெருக்குரல் அறிவையும் அந்த கச்சேரியில் பாட வைத்து விடுங்க சந்தோஷ் நாராயணன் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M