Categories: Cinema News latest news

என்னய்யா பண்றீங்க…? நாங்க என்ன கோமாளியா…? ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகும் இயக்குனர் பா.ரஞ்சித்…!

உதவி இயக்குனராக இருந்து அட்டகத்தி படம் மூலம் 2012 ஆம் ஆண்டில் இருந்து இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவருடைய முக்கால் வாசி படங்கள் கலாச்சாரம், மதப்பிரிவினை, வன் கொடுமை போன்ற சமூக்த்தில் நடக்கும் பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு அதனால் ஏற்படும் கஷ்டங்கள் , துயரங்கள் பற்றியதாக படம் இருக்கும்.

அடுத்து ரஜினியை வைத்து கபாலி என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் மலேசிய டானாக நடித்திருப்பார் ரஜினி. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருத்திருப்பார். இந்த படத்தின் முதல் காட்சி அமெரிக்காவில் முதன் முதலில் திரையிடப்பட்டது. இதை ரஜினி உட்பட 30 பேருக்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.

இதையும் படிங்கள் : இட்லி ஷேப்பு… கருப்பு ட்ரஸ்ல வெறிக்க வெறிக்க வெறியேத்தும் மிருணாளினி!

இதையடுத்து காலா படம் மும்பை நிழல் உலக தாதா போன்ற தோற்றத்தில் ரஜினி நடித்திருப்பார். இந்த படமும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை காப்பாற்றும் விதமான கதையம்சமாக கொண்டதாக இருக்கும். அடுத்த படமான சார்பட்டா பரம்பரை முழுக்க முழுக்க அரசியல் போர்வை போர்த்திய படமாக அரசியல் சின்னங்கள் அமைந்த படமாக விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இவரின் படங்கள் தொடர்ச்சியாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கொண்டு வந்து மக்கள் முன் பறைசாற்றுவதாக இருக்கும்.

இதே வரிசையில் இவரின் அடுத்த படம் வேட்டுவம். இதன் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரான்ஸில் வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதை பார்த்து ரசிகர்கள் ஏன்யா? படத்தையாவது தமிழ் நாட்டுல ரிலீஸ் பண்ணுவீங்களா? இல்லையா? என கோபத்துடன் கேட்கிற மாதிரியான தோணியில் பதிவிட்டு வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini