என்ன பா. ரஞ்சித் பேய் கதையை எடுத்து வச்சிருக்காரு!.. தங்கலான் டிரெய்லரில் என்னென்ன குறைகள்?

பா. ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முன்னதாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் டைரக்ட்டாக வெளியானது. அந்த படத்துக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சியான் விக்ரம், பசுபதி, பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படத்தை உருவாக்கி உள்ளதாக பா. ரஞ்சித் கூறியிருந்தார். தற்போது வெளியான அந்த டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் இது என்ன பேய் படமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.பா. ரஞ்சித் கிராபிக்ஸ் சிஜி எல்லாம் பயன்படுத்தாமல் லைவாகவே படத்தை எடுத்திருப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு, திடீரென ஏகப்பட்ட சிஜி காட்சிகள் அதுவும் மொக்கையாக உள்ள நிலையில், டிரெய்லரை பார்த்ததுமே ஒரு வித பயம் தொற்றிக் கொண்டுள்ளது.

குறிப்பாக மெயின் வில்லியாகவே மாளவிகா மோகனனை சூனியக்காரியாகவும், அவரை அடக்கினால் தான் தங்கத்தை கண்டு பிடிக்க முடியும் என்கிற கதையை படமாக பா. ரஞ்சித் எடுத்துள்ளது டிரெய்லர் மூலமாக தெரிய வந்த நிலையில், காந்தாரா படம் மாதிரி இருக்குமா? அல்லது சாமி இல்லை பூதம் என சாமி ஸ்கொயராக மாறி விடுமா என நெட்டிசன்கள் உண்மையாகவே டிரெய்லர் நல்லா இருக்கா? இல்லையா? என கேட்டு வருகின்றனர்.சியான் விக்ரமின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், பா. ரஞ்சித்தின் கதை மற்றும் திரைக்கதை படத்திற்கு வலு சேர்க்கவில்லை என்றால் சிரமம் தான் என்கின்றனர். மேலும், டிரெய்லரில் பல இடங்களில் சிஜி காட்சிகள் சரியில்லாமல் இருப்பது பெரிய குறையாக உள்ளது.

Related Articles

Next Story