Connect with us

Cinema News

படையப்பா படத்தில் ஷாலினி அஜித்தா? ஆனா பொண்ணு ரோல் இல்லையாம்… ஏகப்பட்ட சுவாரஸ்யமால இருக்கு!…

Padaiyappa: ரஜினிகாந்த நடிப்பில் மாஸ் ஹிட்டடித்த படையப்பா படத்தின் ஷாலினி அஜித் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவருக்கு பதில் அந்த கேரக்டரில் நடித்தவர் குறித்த சுவாரஸ்ய தகவலும் கசிந்துள்ளது.

இத்திரைப்படத்தை கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் எச். விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்த இருந்தனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிகாந்த், செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் அமோக வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ரஜினியை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என அழைத்த அறிமுக நடிகை!.. பதட்டமான படப்பிடிப்பு!..

இப்படம் 1999ம் ஆண்டு ரிலீஸாகி கிட்டத்தட்ட 25 வருடங்கள் தாண்டிவிட்டது. மேலும், 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் வசூலை முறியடித்தது. அப்படத்தில் ரஜினிகாந்த் சால்வை வீசி ஊஞ்சலை இழுப்பார். இது ராமாயணத்தில் ராமனுக்கு அனுமன் வாலை கொடுத்ததை வைத்து உருவாக்கப்பட்டதாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதி இருந்தார். மீனா மற்றும் நக்மா தான் முதலில் அந்த ரோலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது. ஆனால் நெகட்டிவ் பாத்திரத்துக்காக நடிகைகள் நோ சொன்ன அந்த கேரக்டர் இன்றளவும் நின்று பேசப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்ல! சாய்பாபா கோயில் இவர் கட்டியதே இல்லையாம்.. அப்புறம் எதுக்கு இந்த வேஷம்

சிம்ரனுக்கு தான் முதலில் ஹீரோயின் வசுந்தரா ரோல் சென்றது. ஆனால் சிம்ரனின் பிஸி ஷெட்யூல் காரணமாக அவரினை தயாரிப்பாளர்களால் புக் செய்ய முடியவில்லையாம். இதனால் அப்போது அருணாச்சலம் படத்தில் நடித்த செளந்தர்யாவுக்கு அந்த ரோல் சென்றது. இதை தொடர்ந்து ரஜினியின் தங்கை வேடத்தில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷாலினி அஜித்.

ஆனால் ஷாலினியின் கால்ஷூட் பிரச்னையால் அவரை புக் செய்யப்பட முடியாமல் போனதாம். அதை தொடர்ந்தே அந்த ரோலில் நடிகை சித்தாரா நடித்ததாக கூறப்படுகிறது. உலகளாவில் வெளியான முதல் தமிழ் படம் படையப்பா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top