Connect with us

Cinema News

தன் நிச்சயத்தில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த நடிகை… நடிப்பு வேண்டாம் என முடிவு எடுத்த தருணம்….

தமிழ் சினிமாவில் சகோதரிகளாக எண்ட்ரி கொடுத்த முக்கியமானவர்களில் லலிதா, பத்மினி, ராகினி தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். இதில் நடிகை பத்மினி மற்ற இருவரை விட அதிகமாக புகழை அடைந்தார். அதன் காரணத்தால் அவர் வாழ்க்கை முக்கிய நிகழ்வையே மிஸ் செய்து இருக்கிறார்.

பத்மினி சிவாஜியின் 2-வது படத்திலேயே அவருடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், எம்.ஜி.ஆரின் 35-வது படமான ‘மதுரை வீரன்’ படத்தில்தான் அவருடன் ஜோடியாக நடிக்க முடிந்தது. தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது ரஷ்ய மொழியிலும் பத்மினி நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், “பர்தேசி” என்ற பெயரில் தயாரான அப்படத்தில் அவர் ரஷ்ய மொழியினை பேசியும் இருக்கிறார்.

நடிகை

பத்மினியினை எளிதாக அடையாளம் காண வேண்டும் என நினைத்தால் அதற்கு அவர் ஒரு பாடலே சான்று. “கண்ணும் கண்ணும் கலந்து” என்று தொடங்கும் அந்தப் பாடல் தான் அது. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம்பெற்று இருந்த அப்பாடலில் பத்மினி, வைஜயந்திமாலா ஆகிய இருவரும் போட்டி போட்டு நடனம் ஆடி இருப்பார்கள்.

இதையும் படிங்க: முதன்முதலாக பெற்ற தாயைக் கூட அழைக்காமல் பத்மினியை அம்மா என்று அழைத்த குழந்தை நட்சத்திரம்

மூன்று சகோதரிகளும் அவரின் அம்மா பேச்சை தான் கேட்பார்களாம். அவரின் சொல்லினை தட்டியதே இல்லையாம். அப்படி புகழின் உச்சியில் இருக்கும் போது பத்மினிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார் அவரது தாயார். அதிலும், சினிமா நடிகர்களோ அது சம்பந்தப்பட்ட யாரும் வேண்டாம் என்பது அவரின் தாயார் விருப்பம். கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை அவர் மருமகனாக கொண்டு வந்தார். தொடர்ந்து, படத்தில் நடிக்கக் கூடாது என்றும் அவரின் தாயார் முடிவெடுத்திருந்தார். இதனால் ஒப்புக்கொண்ட படங்களினை விரைந்து முடிக்க அரும்பாடு பட்டிருக்கிறார் பத்மினி.

1960-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதியன்று ஆலப்புழையில் பத்மினி நிச்சயத்தார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மினியால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில், ஜவஹர்லால் நேருவின் முன்னால் ராகினியுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை உடனே சினிமாவில் இருந்து வெளியேறி விட முடியாது என்பதால் இவர் திருமணத்திற்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டு இருக்கிறது. தொடர் வாய்ப்புகளால் கடைசி நேரம் வரை படப்பிடிப்பு இருந்ததாம்.  திருமணம் குறித்த நேரத்தில் நடக்குமா என்ற சந்தேகம் கூட எழுந்தாக கூறப்படுகிறது. இருந்தும் ஒரு வழியாக, படத்தினை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top