×

பவுலரை பேட்டால் தாக்க முயன்ற பாகிஸ்தான் வீரர் – வைரலாகும் வீடியோ!

வெஸ்ட் இண்டீஸில் நடந்துவரும் கரிபீயன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் இரு வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸில் நடந்துவரும் கரிபீயன் கிரிக்கெட் லீக் போட்டிகளில் இரு வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் போல ஆண்டுதோறும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரிபீயன் கிரிக்கெட் லீக் என்ற தொடரை நடத்தி வருகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாட்டு வீரர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

கொரோனாவால் இந்த ஆண்டு கரிபியன் லீக் 20 ஒவர் தொடர் சமீபத்தில் தாமதமாக தொடங்கி நடந்து வருகின்றன. இந்த தொடரில் ஜமாய்கா டாலவாஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது

அப்போது பார்படோஸ் அணியைச் சேர்ந்த கீமோ பால் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின்  ஆசிப் அலி அவுட் ஆனார். அதனால் விக்கெட் எடுத்த கொண்டாட்டத்தில் கீமோ பால், அலியின் பக்கக்த்தில் சென்று வெறுப்பேற்ற, கோபமான அலி பேட்டை கீமோ பால் முகத்துக்கு அருகில் சுழற்றினார். நல்ல வேளையாக அது அவர் முகத்தில் படவில்லை. இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

From around the web

Trending Videos

Tamilnadu News