பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் பள்ளிச்சட்டம்பி.. முதல் நாள் வசூல் இவ்வளவா?
விஷு பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் பள்ளிச்சட்டம்பி. டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடித்துள்ள இந்த படத்தில் பிரிதிவிராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளர். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இந்த படம் கிருஸ்துவ தேவலயத்தை மையமாக கொண்டு 1980களில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் பள்ளி சட்டம்பி வெளியான முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாளில் உலகளவி ரூ.10.34 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். வரும் நாட்களில் குறிப்பாக விடுமுறை தினங்களான சனி, ஞாயிறுகளில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து 100 கோடி கிளப்பில் மிக எளிதாக இணைந்து வரும் நிலையில், பள்ளிச்சட்டம்பி திரைப்படமும் இணைந்துவிடும் என்றே தெரிகிறது.
