Pallichattambi Official Teaser: டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி டீசர் வெளியீடு!
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக் உள்ள படம் பள்ளிச்சட்டம்பி.
இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது.ஜன கண மன மற்றும் மலையாளி ஃப்ரம் இந்தியா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இது 1950களின் காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு பீரியட் கதை கொண்ட திரைப்படம்.
இப்படத்தில் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக டிராகன் புகழ் நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். இவர்களுடன் விஜயராகவன், ஜானி ஆண்டனி, சுதீர் கரமனா, டி.ஜி. ரவி, ஸ்ரீஜித் ரவி, மற்றும் பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். '
ஜேக்ஸ் பிஜாய் இசையில் வேர்ல்ட் வைடு பிலிம்ஸ் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் இப்படத்தை மிக பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 10-ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டொவினோ தாமஸ் கயாடு லோஹர் நடித்த பாடல் யூடியூப்பில் வெளியாகி 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாடஹ்னை புரிந்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளீயானது. மிரட்டலான தோற்றத்தில் டொவினோ தாமஸ் தோன்றுகிறார். டிரைலரை இங்கே காண்க
