×

நீங்க இல்லாம இது சாத்தியமே இல்லை... உருகிய `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியலில் நடித்து வரும் மீனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். 
 
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ஹிந்தி, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கூட்டுக்குடும்பம், சகோதரர்களின் பாசப்பினைப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

அந்தவகையில், மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமாவுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் சமீபத்தில் தனக்காக ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட், பின்னணித் தகவல்கள் என இவர் கொடுக்கும் அப்டேட்டுகளுக்கு ரசிகர் வட்டம் பெரிதானது. இதனால், யூடியூபில் இருந்து இவருக்கு சில்வர் பிளே பட்டன் கிடைத்திருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கு மேல் சப்ஸ்கிரைப் செய்தால் கிடைக்கும் மரியாதை அது. 


இதுகுறித்து நெகிழ்ச்சியோடு பேசியிருக்கும் ஹேமா, ``ஹேமாஸ் டைரி சேனலுக்கு யூடியூப் பிளே பட்டன் கிடைத்திருக்கிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட `ஹேமாஸ் டைரி' சேனலை இதுவரை 2.19 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார். இதற்காக அனைவருக்கும் நன்றி. என்னுடைய வீடியோக்கள் உங்களுக்கு ரசிக்கும்படியாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். நீங்களும், என்ன மாதிரியான பயனுள்ள வீடியோக்கள் அப்லோட் செய்யலாம் என்று சொல்லலாம். அதன்மூலம் இன்னும் நல்ல வீடியோக்களை நாங்கள் உருவாக்கி வெளியிடுவோம்” என்றிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News