Pandian Stores2: கோர்ட் படியேறும் அரசி… குமாருக்கு தண்டனை கிடைத்தால் அடுத்து என்ன ஆகும்?
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
செந்தில் தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுது அவர் விளையாட்டாக கையை நீட்டும் போது அது மீனாவின் மீது அடித்து விடுகிறது. அவரும் தூக்கத்திலிருந்து எழுந்து என்னை யாரோ அடிச்ச மாதிரி இருந்துச்சு என்கிறார்.
உடனே செந்தில் நான் தான் கையை நீட்டும் போது பட்டு விட்டதாக கூறுகிறார். சரி நீங்க எதுக்கு இன்னும் தூங்காம உட்கார்ந்து இருக்கீங்க என மீனா கேட்க இன்னும் நான்கு நாளில் சம்பள நாள் வரப்போகிறது என்கிறார். இப்போ அதுக்கு என்ன என்கிறார் மீனா.
எனக்கு சம்பளம் வரும் என செந்தில் கூற எனக்கும் சம்பளம் வருமே என்கிறார் மீனா. இருக்கலாம். ஆனா எனக்கு இது முதல் சம்பளம் என்கிறார். உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்க நானே வாங்கிக்குவேனே என செந்தில் கூற இல்ல சொல்லு நான் வாங்கி தரேன் என்கிறார்.
சாப்பிட போகலாம் என்கிறார். சரி போகலாம் வேற என்ன வேண்டும். வைர தோடு வேண்டுமா என்கிறார். இதை கேட்கும் மீனா நம்ம வாங்கின கடனை வேற அடைக்கணும். நீங்க என்னன்னா ஹோட்டல் போகணும் வைரத்தோடு என லிஸ்ட் போட்டுக்கிட்டு இருக்கீங்க.
இதனால்தான் மாமா உங்களுக்கு காசே கொடுக்கல எனக் கலாய்க்கிறார். இதில் கடுப்பாகும் செந்தில் இனிமே என் லெவலை பாரு. நான் வேற மாதிரி இருப்பேன் எனக் கூறுகிறார். மீனா சரி நான் தூங்க போறேன். நீங்களும் தூங்குங்க எனக் கூற இல்ல இன்னும் பிளான் இருக்கு என்கிறார்.
அடுத்தநாள் மருமகள்கள் அமைதியாக இருக்க அரசி வருகிறார். கோமதி சாமி அறையில் இருப்பதை பார்த்து அவரிடம் காப்பி கேட்கிறார். உடனே அவரும் சாமியிடம் வேண்டிவிட்டு போட செல்கிறார். அரசி டைனிங் டேபிளில் உட்கார ராஜி, மீனா, மயில் அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
நாங்க வரவா எனக் கேட்க அரசி வேண்டாம். அதான் அப்பா, அம்மா வராங்களே பாத்துக்கலாம் என்கிறார். பின்னர் செந்தில், கதிர், சரவணன் அரசியை அழைத்து அவருக்கு பிடித்த சாப்பாட்டை கொடுத்து அவரை ஆறுதல் படுத்த கவலைப்படாதீங்க. நான் சரியா இருக்கேன் என அரசி தைரியமாக பேசுகிறார்.
பின்னர் குமார் வீட்டிலும் எல்லாரும் கேஸ் விஷயமாக பரபரப்பாக இருக்கின்றனர். சக்திவேல், முத்துவேலிடம் நீங்க ராஜிக்கு பேசுவீங்க. குமாருக்கு சொல்றீங்களே தவிர செய்ய மாட்றீங்களே என்கிறார். உடனே வடிவு திட்ட முத்துவேலுவும் குமாருக்கு செய்வதை செஞ்சி விடுவேன் என்கிறார். குமார் அம்மா அவங்க கேஸ் கொடுக்கலைனா இவ்வளோ பிரச்னையே இல்லை என அழுதுவிட்டு செல்கிறார்.
பின்னர் அப்பத்தா பாண்டியனை ரோட்டில் பார்த்து குமார் கேஸை வாபஸ் வாங்க கோரிக்கை வைக்க அவர் அரசிக்கு ஊரில் நடப்பதை கூறிவிட்டு வந்துவிடுகிறார். வீட்டில் கோமதி பயத்தில் இருக்க எல்லாரும் அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
பாண்டியன் எல்லாரையும் திட்டி கோமதியை கோர்ட்டிற்கு கிளம்ப சொல்கிறார். சுகன்யா பேச வர அவரை கடுப்பில் கோமதி கத்தி விடுகிறார். இந்த கேஸ் எப்படியோ போகுது. நம்ம போக வேண்டாம் எனக் கேட்க பாண்டியன் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
