Pandian Stores2: தங்கமயிலின் கர்ப்ப விஷயத்தில் நடந்த திடீர் ட்விஸ்ட்… அடுத்த பிரச்னை ஆரம்பிச்சிடுச்சே!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
தங்க மயிலின் கர்ப்பத்தை பரிசோதனை செய்ய அவருடன் ராஜி மற்றும் கதிர், கோமதி, மயிலின் அம்மா என குடும்பமே கிளம்பி மருத்துவமனை வந்திருக்கின்றனர். சந்தோஷமாக எல்லோரும் டாக்டரை பார்க்க உள்ளே செல்கின்றனர்.
தங்கமயில் அம்மா வீட்டில் கிட் வாங்கி செக் செய்தோம். அதில் பாசிடிவ் என வந்ததாக கூறுகிறார். சரி என டாக்டர் மயிலை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரை பரிசோதனை செய்ய டாக்டரின் முகம் மாறிவிடுகிறது. மயில் தன்னுடைய குழந்தை எப்படி இருக்கிறது?? ஏன் என்னிடம் காட்டவில்லை என கேட்கிறார்.
டாக்டர் அவரிடம் சொல்கிறேன் வாங்க என அழைத்து ரூமிற்குள் வந்தவுடன் மற்றவர்களிடம் மயில் கர்ப்பமாக இல்லை என அதிர்ச்சி கொடுக்கிறார். எல்லோரும் அதிர்ச்சியில் டாக்டரை கேள்வியாக பார்க்கின்றனர். மயில் தான் கிட் வைத்து செக் செய்தேன் என்கிறார்.
இன்னொரு முறை செக் செய்ய வேண்டும் என மயில் அழுது கொண்டே கேட்க நான் சரியாக சோதித்து பார்த்து விட்டேன். நீ கர்ப்பம் இல்லை என டாக்டர் கூறுகிறார். சிலருக்கு பரிசோதனை கிட்டில் இப்படி மாற்றி வருவது வழக்கம்தான் எனவும் சொல்ல குடும்பமே அதிர்ச்சியாகி விடுகின்றனர்.
சரவணன் அதிர்ச்சியாக அங்கிருந்து வெளியில் சென்று விடுகிறார். மயிலின் அம்மா நாங்க வேற டாக்டரை போய் பார்க்கிறோம் எனக் கூற, நீங்க யாரிடம் வேண்டுமானாலும் போய் பாருங்க எல்லோரும் இதைத்தான் சொல்லுவார்கள் என கூறி விடுகிறார்.
கோமதி வெளியில் வந்து ராஜியிடம் விஷயத்தை சொல்ல அவரும் அதிர்ச்சியுடன் சரவணன் பார்க்கிறார். மயில் குறித்து கேட்க அவள் உள்ளே அழுது கொண்டிருப்பதாக கோமதி சொல்கிறார். பின்னர் கோமதி மயிலை அழைத்துக் கொண்டு வெளியில் வர அவருக்கு ஆறுதல் சொல்கிறார் ராஜி.
எல்லோரும் கிளம்பி வீட்டிற்கு வர யாரும் பேசாமல் அமைதியாக வந்து கொண்டிருக்கின்றனர். எல்லோரும் வீடு வந்தும் இறங்காமல் இருக்க கதிர் எல்லோரையும் இறங்க கூறுகிறார். தங்கமயில் அம்மா மயிலை பார்த்து எனக் கூற கோமதி யோசிக்காமல் இனி பார்த்து இறங்கினால் என்ன எனக் கேட்க மயில் அதிர்ச்சியாக பார்க்கிறார்.
வீட்டிற்குள் மயில் செல்ல அழைத்து வர சரவணன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்ப கதிர் அவரை தடுத்து நிறுத்துகிறார். அவர் கடைக்கு போகணும் எனக் கூற கதிர் வா நான் கூட்டி போறேன் என்கிறார். மயில் வீட்டிற்குள் வர எல்லாரும் அழுதுக்கொண்டு இருக்கிறார்கள். சுகன்யாவும் மயிலுக்கு ஆறுதல் சொல்கிறார்.
கதிர் மற்றும் சரவணன் இருவரும் நடந்து கடைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். மயில் தன்னிடம் கர்ப்பத்தை பொய் சொன்னதாக நினைத்து பழைய விஷயங்களை யோசித்து அவர் மீது கோபத்தில் நடந்து கொண்டு இருக்கிறார்.
