Categories: latest news television

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமியின் அடுத்த மகா சங்கமம் ஆரம்பம்!… எத்தன தடவை?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் மற்றும் பாக்கியலட்சுமியின் சங்கமமாக நடந்து இருக்கிறது. பாக்கியா எல்லாரிடமும் சொல்லிவிட்டு எழில் மற்றும் அமிர்தாவை மட்டும் அழைத்துக்கொண்டு மினிஸ்டர் ஆர்டருக்காக திருச்செந்தூர் செல்கிறார்.

கணேஷ் வந்துவிடுவானோ என பயந்தே அவர்களை என்னிடம் கூட்டிசெல்கிறேன். ராமமூர்த்தி, செழியன், ஈஸ்வரி, இனியாவிடம் சொல்லிவிட்டு எல்லாரும் வேனில் ஏறி கிளம்புகின்றனர். அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸில் கோமதி, கதிர், மருமகளுடன் திருச்செந்தூர் கிளம்புகிறார். இதை தொடர்ந்து அவர் தம்பியுடம் கல்யாண வீட்டில் நடப்பதை எனக்கு அப்போ அப்போ சொல்லு எனச் சொல்லிவிட்டு செல்கிறார். 

இதையும் படிங்க: சொக்கி இழுக்கும் குரல் மூலம் நடிகைகளை மனதில் பதிய வைத்த எஸ்.ஜானகி!. அட இத்தனை பாடல்களா!..

அவர் தம்பி வீட்டுக்கு போக கோமதி அக்கா ஊருக்கு போய்விட்டதாக கூறுகிறார். ஏன் எனக் கேட்க அவங்க இங்க இருந்தா கல்யாணத்துக்கு எதுக்கு கூப்பிடலைனு கேள்வி வரும் தான் அக்கா போச்சு எனக் கூறுகிறார். முத்துவேல் மற்றும் சக்தி வேல் அவளை கூப்பிடலாம் முடியாது எனக் கூறிவிடுகின்றனர்.

இதனால் கோமதி மனம் கசங்கி கண்ணீர் விடுகின்றனர். பின்னர் மருமகள்களும், மகனும் ஆறுதல் சொல்கின்றனர். பாக்கியா வேனில் எல்லாரும் சென்று கொண்டு இருக்கின்றனர். அப்போ செல்வி என்ன எல்லாரும் தூங்குறாங்க நான் எழுப்பி விடுறேன் என்கிறார்.

இதையும் படிங்க: மாமா வருவாரா? இல்லையா? குழப்பத்தில் ரோகினி.. ஓவர் சீன் போடுறீங்க விஜயா!…

இதனால் கதிருக்கும், எழிலுக்கும் சண்டை முட்டிக்கொள்கிறது. பின்னர் சமாதானம் செய்து பாக்கியா எழிலை அழைத்துசெல்ல கோமதியும் அப்படியே செய்கிறார். பின்னர் எல்லாரும் ஒரே ஹோட்டலில் ரூம் எடுத்துஇருக்க அங்கையும் கதிரும், எழிலும் முட்டிக்கொள்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Published by
Shamily