Connect with us

Cinema News

உங்களுக்கு ஆடவே தெரியல! குருநாதர் செய்த தவறை மறைக்க ஹீரோயின் மீது பழிப்போட்ட பாண்டியராஜன்!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் பாக்யராஜ் முக்கியமானவர். அவர் இயக்குனராக இருந்த காலத்தில் அதிகமாக ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் கொடுத்துள்ளார்.

இப்போதும் சினி இன்ஸ்டிட்யூட்களில் கமர்ஷியல் சினிமா எடுப்பது எப்படி என்பதற்கு உதாரணமாக முந்தானை முடிச்சி திரைப்படத்தைதான் ஒளிப்பரப்புகிறார்கள். அந்த அளவிற்கு மக்களின் மனநிலை அறிந்து படம் எடுக்க தெரிந்தவர் பாக்யராஜ்.

அவரது ஹிட் படங்களில் டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படமும் ஒன்று. 1982 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படம் தயாரானது. இந்த திரைப்படத்தில் பாக்யராஜின் மனைவியான பூர்ணிமா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு திருமணமாகவில்லை.

பூர்ணிமா நன்றாக நடனமாட கூடியவர். ஆனால் அவர் நடனமாடும்போதெல்லாம் அங்கு உதவி இயக்குனராக பணிப்புரிந்த பாண்டியராஜன் நடனம் சரியாக வரவில்லை என மறுபடி மறுபடி ஷுட்டிங் நடத்தி வந்தார். இதனால் பூர்ணிமாவிற்கே சரியாகதான் ஆடுகிறோமா? என்கிற சந்தேகம் வந்துள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால் பாக்யராஜிற்கு நடனம் அவ்வளவு சிறப்பாக வராது. இதனால் பாடல் காட்சிகளில் நிறைய இடத்தில் நடனத்தை தவறவிட்டார் பாக்யராஜ். அப்போது பாண்டியராஜன் தனது குரு மீது தவறு சொல்லக்கூடாது என பூர்ணிமா மீது பழிப்போட்டுள்ளார். இதை பிறகு பாண்டியராஜன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top