×

சூர்யா 40 படம் சும்மா அதிரும்!.. இயக்குனர் பாண்டியராஜ் கூறிய தகவல்

 
suriysa

தமிழ் சினிமாவில் பசங்க, பசங்க 2, நம்ம வீட்டுப்பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் பாண்டிராஜ்.  

தற்போது சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.        

இந்நிலையில், இப்படம் பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த இயக்குனர் பாண்டிராஜ் ‘ கார்த்தியின் ரசிகர்களுக்கு எப்படி ‘கடைக்குட்டி சிங்கம்’ பிடித்திருந்ததோ, அதுபோல சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வர வேண்டும் என நானும், சூர்யாவும் கவனமுடன் இருந்து வருகிறோம். எனவே, படம் சிறப்பாக உருவாகி வருகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.

suriya

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் சத்தியராஜ், சரண்யா பொன்வன்னன் மற்றும் இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News