Connect with us
revathi

Cinema News

ரேவதி கன்னத்தில் பாளார் அறைவிட்ட பாண்டியன்… படப்பிடிப்பில் நடந்த களோபரம்….

அரங்குக்குள் மட்டுமே படமாக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவை வயல் வெளிகளுக்கு கூட்டி சென்றவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் திரைப்படத்தில்தான் நிஜமான கிராமங்கள் காட்டப்பட்டது. கிராமத்து மனிதர்களை போல இயல்பாக நடிகர்கள் நடித்தனர். அதனால், அவர் படங்களில் மண்வாசனை வீசியது.

Bharathiraja

Bharathiraja

இவர் ராதா, ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா என பல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துள்ளார். பாரதிராஜா படப்பிடிப்பில் கோபமாக நடந்துகொள்வார் என்றும், நடிக்க தெரியாத நடிகைகளை கன்னத்தில் அறைந்தே நடிக்க வைப்பார் என பலரும் சொல்வார்கள். அவரிடம் அறை வாங்கியதாக பல நடிகைகளும் பேட்டிகளில் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இது அவரின் இயக்கத்தில் நடித்த எல்லா நடிகைகளுக்கும் நடந்துள்ளது.

revathi

revathi

பாரதிராஜாவால் மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர்தான் நடிகை ரேவதி. முதல் படத்திலேயே அவரை சிறப்பாக நடிக்க வைத்திருப்பார் பாரதிராஜா. இதற்காக அப்படத்தில் பல அறைகளை பாரதிராஜாவிடம் வாங்கினார் ரேவதி. இது பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள ரேவதி ‘பாராதிராஜாவிடம் அடி வாங்குவதற்கு முன்பே நான் அப்படத்தில் நடித்த பாண்டியனிடம் அறை வாங்கினேன்.

bharathi1

bharathiraja

ஒரு காட்சியில் அவர் என்னை அறைய வேண்டும். அதுதான் அவருக்கு முதல் படம், ஒரு பெண்ணை அறைவது போல் காட்சி என்பதால் அவருக்கு எப்படி அறைவது என தெரியவில்லை. எனவே, என்னை அறைந்துகொண்டே இருந்தார். ஆனால், பாரதிராஜாவுக்கு திருப்தி இல்லை. கோபத்தில் அவரை ஒரு அறைவிட்டார். அந்த கோபத்தில் என்னை பாண்டியன் ஓங்கி ஒரு அறைவிட்டார். சத்தம் கொய்ங் என வந்தது. எனக்கு வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை’ என அந்த பேட்டியில் ரேவதி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: கமலின் பிரம்மாண்ட படத்தில் நைசா நுழைந்த ஜெயம் ரவி.. பார்ட்டி செம கில்லாடிதான்!..

Continue Reading

More in Cinema News

To Top