Connect with us
Bhagyaraj Pandiyarajan

Cinema News

‘அசிஸ்டண்டா ஏத்துக்கங்க’ன்னு பாக்கியராஜ் காலில் விழுந்து கெஞ்சிய பாண்டியராஜன்..! இப்படி எல்லாமா நடந்தது?

பாரதிராஜாவின் சீடர் பாக்கியராஜ். அவரது சீடர் பாண்டியராஜன். இது குருவழி பரம்பரைன்னு சொல்வாங்க. அந்த வகையில் அந்தக் காலத்தில் ரசிகர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு நல்ல நல்ல படங்களாக வெளிவந்தன. அது 80களில் நடந்தது.

இது தான் சினிமாவின் பொற்காலமாக இருந்தது. அப்போது சினிமா ஆர்வம் காரணமாக ஊரில் இருந்து சென்னைக்கு எத்தனையோ பேர் வந்து பட்டினியும், பசியுமாக கிடந்து சாதித்துள்ளார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது. பார்க்கலாமா…

இதையும் படிங்க… நான் பண்றனோ இல்லையோ.. நீ நல்லா பண்றே!.. உதயநிதியிடம் உருட்டிய விஜய்!….

என்னை அசிஸ்டண்டா ஏத்துக்கங்கன்னு கால்ல விழுந்து கதறினேன் என பாக்கியராஜிடம் சேர்ந்தது குறித்து நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாக்கியராஜ் சார் தொடர்ந்து ஹிட் கொடுக்கும்போது அவரை நான் வியப்பாக பார்த்தேன். கிட்ட நெருங்க நெருங்க தான் எவ்வளவு எளிமையானவருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அப்போ உள்ள குரு சிஷ்ய உறவு இப்போ இல்ல என்கிறார் பாண்டியராஜன்.

அவரு சொந்த கம்பெனில எனக்கு கதாநாயகனாகவும், டைரக்டராகவும் ஒர்க் கொடுத்து வேலை பாருங்கன்னாரு. அந்த மனசு யாருக்காவது வருமா? அவருக்கிட்ட நான் ஆபீஸ் பாய். அவரு நினைச்சா ‘நம்மகிட்ட ஆபீஸ்பாயா இருந்தவன் இவன்… இவனை ஹீரோவா போடலாமா?’ன்னு அவரு நினைச்சிருக்கலாம். ஆனா அவரு அப்படி செய்யல.

‘கபடி கபடி’ என்ற படத்துக்கு அவரு தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். இயக்கம் மட்டும் என் பேரு போட்டாரு. படம் அவரோடது. ‘அசிஸ்டண்ட் டைரக்டரா சேர்த்துக்கங்க’ன்னு கேட்கும்போது ‘என்னை வேணாம்… நிறைய பேரு இருக்காங்க’ன்னு சொல்லிட்டாரு. மறுநாள் சூட்டிங்ல நான் ‘கிளாப்’ அடிக்கிறேன். என்னைப் பார்த்துட்டாரு. ‘உன்னை யாரு கிளாப் அடிக்கச் சொன்னது?’ன்னு கேட்டாரு.

அப்படியே அவரு கால்ல விழுந்து கண்ணீரோடு ‘சார் நான் அப்பா இல்லாத பையன் சார். சினிமா தான் சார் உயிர். எனக்கு வேலை மட்டும் கத்துக்கொடுங்க சார்’னு கேட்குறேன். ஆர்டிஸ்ட் எல்லாரும் நிக்கிறாங்க. பரிதாபமா என்னைப் பார்க்குறாரு.

இதையும் படிங்க… நான் 5 லட்சமே பார்த்தது இல்ல… 15 லட்சமா? பாலசந்தருக்கே ‘ஷாக்’ கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

அழுகையைப் பார்த்தவுடனே ‘சரி. ஓகே. கண்டினியு பண்ணு’ன்னு சொல்லிட்டாரு. அப்படித்தான் என் வாழ்க்கைத் துவங்கினது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் எவ்வளவோ கஷ்டப்பட்டு அசிஸ்டண்டா சேர்ந்த பாண்டியராஜன் பின்னாளில் கன்னிராசி, ஆண்பாவம், நெத்தி அடி, மனைவி ரெடின்னு பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து குருநாதரின் பெயருக்குப் புகழ் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top