கமலுக்கு பதிலா ரஜினிய நடிக்க சொன்னேன்.. சீனு ராமசாமி சொன்ன படம் எது தெரியுமா?
ரஜினி கமல் என இரு ஆளுமைகள்:
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். எம்ஜிஆர் சிவாஜியை எந்தளவுக்கு மக்கள் தங்கள் மனதில் போற்றி பாராட்டி வந்தார்களோ அதே அளவுக்கு கமலையும் ரஜினியையும் தற்போது உச்சத்தில் வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். சினிமாவில் இவர்கள் அடைந்த சாதனைகள் பெருமைகள் ஏராளம். அதற்காக இவர்கள் பட்ட கஷ்டங்களும் ஏராளம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து இன்றுவரை தன்னுடைய புதுப்புது கண்டுபிடிப்புகளால் சினிமாவை அடுத்த லெவலுக்கு எப்படி கொண்டு போகலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர் கமல். அதைப்போல ரஜினி ஆரம்பத்தில் ஒரு சாதாரண துணை நடிகராக நடிக்க ஆரம்பித்து வில்லனாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். வில்லனாக அதுவும் கமலுக்கு வில்லனாகவே பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நட்புக்கு அடையாளம்:
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ரசிகர்கள் படைபலம் அதிகரிக்க அதுவரை இரண்டு பேருமே இணைந்து நடித்து வந்த நேரத்தில் தனித்தனியாக படங்களில் நடிக்க தொடங்கினார்கள். அப்பொழுது இருந்துதான் சினிமாவில் இரட்டை ராஜ்ஜியம் தொடங்கியது .ஒன்று கமல் மற்றொன்று ரஜினி. அது இன்று வரை சமூகமாக சென்று கொண்டிருக்கின்றது. தொழில் முனையில் இவர்களுக்கு இடையே போட்டி இருந்தாலும் உண்மையில் இவர்களைப் போல நல்ல நண்பர்கள் இந்த சினிமாவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தான் கலந்து கொள்ளும் எந்த ஒரு மேடையானாலும் இருவருமே தங்கள் நட்பை கற்புக்கும் மேலாக போற்றுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் கமல் நடித்த ஒரு படத்தில் ரஜினியை தான் நடிக்க சொன்னேன் என இயக்குனர் சீனு ராமசாமி சொன்ன ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. அது வேறு எந்த படமும் இல்லை. பாபநாசம். இந்த படத்தின் மலையாள வெர்சனான திர்ஷியம் படத்தை முதன் முதலில் சீனு ராமசாமி ஒரு திரையரங்கில் பார்த்தாராம்.
பாபநாசம் :
பார்த்துவிட்டு லிங்குசாமியின் சகோதரர் போஸை அழைத்து இந்த மாதிரி நான் ஒரு படம் பார்த்தேன். மிக அற்புதமாக இருக்கிறது. இதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும். அதனால் இந்த படத்தின் ரைட்சை நீ வாங்கிக் கொண்டு ரஜினியிடம் போய் கதை சொல் என சொல்லி இருக்கிறார். லிங்குசாமியின் சகோதரர் போஸும் அந்தப் படத்தின் ரைட்சை வாங்கிக் கொண்டு ரஜினியிடம் போகாமல் கமலிடம் போய் இருக்கிறார்.
ஆனால் அங்கு கமலுக்கு சொல்லப்பட்ட கதை வேறு. அதுதான் உத்தமவில்லன். அந்த படத்தை லிங்குசாமி இயக்கினார். சந்திரபோஸ் அப்போது வேறொரு நடிகையை வைத்து ஏதோ ஒரு படத்தை எடுத்தாராம். உடனே சீனு ராமசாமி போஸை அழைத்து நான் உன்னை ரஜினியிடம் போக சொன்னால் கமலிடம் போய் இருக்கிறாய் எனக் கூறி பாபநாசம் படத்தில் கமலுக்கு பதிலாக ரஜினி நடித்திருந்தால் அது வேறு ஒரு வெர்ஷனாக வந்திருக்கும். கமல் நடித்திருந்தாலும் படம் அற்புதமாகத்தான் இருக்கிறது. இதுவே ரஜினி நடித்திருந்தால் இன்னும் படம் வேறொரு பரிணாமத்தில் இருந்திருக்கும் என ஒரு பேட்டியில் சீனு ராமசாமி கூறினார்.