கீர்த்தி சுரேஷை படங்களில் பார்க்கவே முடிவதில்லையே.. நேரடியாக நடிகையிடம் வந்து விழுந்த கேள்வி!..
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் இன்று சட்டமனற தேர்தலை முன்னிட்டு வாக்களித்து வெளியே வந்த போது அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வி சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவராக இருப்பார் என நினைத்தவர்களுக்கு இன்று அவர் சென்னையில் வாக்களித்த நிலையில், தொடர்ந்து அவர் இங்கே தான் வாக்காளர் அட்டையை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு பெண்ணாக வாழ்ந்து வருகிறார் என்பது தெளிவாக புரிந்திருக்கும். விஜய் வாக்களித்த சென்னை நீலாங்கரை தொகுதியில் தான் நடிகை கீர்த்தி சுரேஷும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தனது நீண்டநாள் நண்பரான ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். தனது காதல் கதையைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துள்ளார். மேலும், திருமணத்திற்குப் பிறகு தனது கதாபாத்திரத்தின் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர் வித்தியாசமான மற்றும் முக்கியமான கதைகளில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறது.
நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ் அதற்கு பிறகு உமன் சென்ட்ரிக் படங்கள் பல நடித்தாலும் அவருக்கு நடிகையர் திலகம் படம் அளவுக்கு எந்தவொரு படமும் வெற்றியை கொடுக்கவில்லை.
இந்தியில் அட்லி தயாரிப்பில் நடித்த தெறி ரீமேக் படமும் அட்டு ஃப்ளாப் ஆகிவிட்டது. இந்நிலையில், அக்கா வெப்சீரிஸ் மற்றும் ஒரு சில படங்களில் மட்டுமே கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கடைசியாக ரூட் தயாரிப்பாளர் ஜெகதீஷ் தயாரித்த ரிவால்வர் ரீட்டாவும் சுடவில்லை.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷை பார்த்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவர், அவர் கடந்து சென்ற பிறகு நிறைய படங்களில் நடிங்க மேடம், இப்போதெல்லாம் உங்களை பார்க்கவே முடிவதில்லை என கலாய்த்து தள்ளிவிட்டார். கூடிய விரைவிலேயே நல்ல படத்தைக் கொடுத்து இதற்கு கீர்த்தி சுரேஷ் தக்க பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
