×

வீட்டில் முடங்கிய ஆண்கள்  ; களை கட்டும் ஆணுறை வியாபாரம் : ஹேட்ஸ் ஆப் டூ கொரோனா

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

21 நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அதோடு, ஐ.டி.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.  


இந்நிலையில், மருந்து கடைகளில் ஆணுறைகளின் விற்பனை களை கட்ட துவங்கியுள்ளது. அதிலும் பல மருந்து கடைகளில் பெண்களே வந்து ஆணுறை வாங்கி செல்கிறார்களாம். முன்பெல்லம் 3 ஆணுறைகள் கொண்ட சிறிய பேக்குகள் மட்டுமே விற்பனை ஆகி வந்த நிலையில், தற்போது பெரிய பேக்குகள் அதிகம் விற்பனை ஆகி வருகிறது என ஆச்சர்யத்துடன் மருந்து கடை வைத்திருப்பவர்கள் கூறுகிறார்கள். எனவே, மாஸ்க், சானிட்டிசர் வரிசையில் ஆணுறைகளையும் ஸ்டாக் வைக்க துவங்கி விட்டதாக தெரிகிறது.

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆணுறை வைத்திருக்கும் பலகைகள் காலியாக கிடக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை குறைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அரசு எல்லோரையும் வீட்டில் இருக்க கூறியிருக்கிறது. ஆனால், நம்மாட்கள் ஆணுறைகள் வாங்குவதை பார்த்தால் மக்கள் தொகை அதிகமாக கூடி விடும் என எதிர்பார்க்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News