Parasakthi: வேறலெவல் லுக்கில் எஸ்.கே, ஜெயம் ரவி!.. ரிலீஸ் தேதியுடன் வெளியான புது போஸ்டர்
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் ஒரு சிறந்த இயக்குனராக கருதப்படுகிறார். இவர் எப்படிப்பட்ட படங்களை இயக்குவார் என்பது சூரரைப்போற்று படத்தின் மேக்கிங்கை பார்த்தால் தெரியும். சூர்யாவின் கெரியரிலும் சூரரைப்போற்று ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற படத்தை இயக்க திட்டமிட்டார் சுதாகொங்கரா. 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி போராட்டம் தொடர்பான கதை இது.
ஆனால் பாலிவுட்டில் கால் பதிக்க ஆசைப்படும் சூர்யாவுக்கு இந்த கதையில் நடிக்க விருப்பமில்லை. எனவே அவர் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னார். அனால, சுதாகொங்கராக அதற்கு மறுக்கவே அந்த படத்திலிருந்து சூர்யா வெளியேறி விட்டார். அதன் பின் இந்த கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் முன் வந்தார். மேலும் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரையும் முக்கிய வேடத்தில் வைத்து பராசக்தி என்கிற தலைப்பில் இந்த படத்தை எடுத்த துவங்கினார் சுதா கொங்கரா. ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

60 காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் எல்லா கதாபாத்திரங்களுக்கும் அந்த காலத்திற்கு ஏற்ற தோற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை இலங்கையில் எடுத்துள்ளனர். இந்த படம் 2026 ஜனவரி 14ம் தேதி வெளியாவதாக அறிவித்து ஒரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. விஜயின் ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் 14ம் தேதி பராசக்தி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
